செப்டம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 2, 11, 20, 29


Abimukatheesh| Last Modified திங்கள், 4 செப்டம்பர் 2017 (18:49 IST)
2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் ஓரளவு நிம்மதி உண்டு. 
 

 
சில வேலைகள் முதல் முயற்சியில் முடிக்க முடியாமல் இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவினங்கள் இருந்துக் கொண்டேயிருக்கும். அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்தப்பாருங்கள். யாருக்காகவும் எந்த வாக்குறுதியும் தர வேண்டாம். பழைய நண்பர்களுடன் மோதல்கள் வரும். 
 
சொந்த-பந்தங்கள் விஷயத்தில் அத்துமீறி தலையிட வேண்டாம். ஆனால் மனைவிவழியில் உதவிகள் கிடைக்கும். மனைவிவழி உறவினர்களால் மனமகிழ்ச்சி கிட்டும். வீடு, மனை வாங்குவது, விற்பது சுமூகமாக முடியும். சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எப்போதும் எதையோ இழந்ததைப் போல இருப்பீர்கள். 
 
முன்கோபத்தால் சிலரின் நட்பை இழக்க நேரிடும். பெரிய நோய் இருப்பதை போல் இருக்கும். தலைச்சுற்றல் வரும். நெஞ்சு வலி வரக்கூடும். ஹார்ட் அட்டக்கோ என்றெல்லாம் பயப்பட வேண்டாம். 
 
அரசியல்வாதிகளே! சகாக்களைப் பற்றிக் குறைக் கூற வேண்டாம். 
 
கன்னிப் பெண்களே! சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பாகும். வெளிநாட்டவர், வேற்றுமொழிக்காரர்களால் புது ஒப்பந்தங்கள் கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். 
 
கலைத்துறையினர்களே! இழந்த புகழை மீண்டும் பெற எதார்த்தமான படைப்புகளை கொடுங்கள். தாணுன்டு தன் வேலை உண்டு என்றிருக்க வேண்டிய மாதமிது.     
 
அதிஷ்ட தேதிகள்: 2, 11, 25
அதிஷ்ட எண்கள்: 1, 6
அதிஷ்ட நிறங்கள்: அடர்நீலம், ரோஸ்
அதிஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி

webdunia

இதில் மேலும் படிக்கவும் :