Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

செப்டம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 1, 10, 19, 28


Abimukatheesh| Last Modified திங்கள், 4 செப்டம்பர் 2017 (18:45 IST)
1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், இந்த மாதத்தில் அனுபவ அறிவால் பல காரியங்களை சாதித்துக் காட்டுவீர்கள். 

 

 
அறிஞர்கள், கல்வியாளர்களின் நட்பு கிடைக்கும். பணவரவு திருப்தி தரும். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். பிள்ளைகளின் வருங்காலத்திற்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். உயர்ரக ஆபரணம் வாங்குவீர்கள். மாதத்தின் மையப்பகுதியில் கொஞ்சம் முன்கோபம் வரும். சகோதரங்களுடன் பிணக்குகள் வரும். நெருங்கிய உறவினர்கள் கூட இப்படி நடந்துக் கொண்டார்களே என்ற ஆதங்கமும் இருக்கும். 
 
என்றாலும் உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை அறியும் சக்தி கிடைக்கும். ஆரோக்யம் சீராகும். மனஉளைச்சல், பிரச்னைகள் நீங்கும். மாதத்தின் பிற்பகுதியில் கணவன்-மனைவிக்குள் கருத்து மோதல்கள், வீண் சந்தேகங்கள் வரும். எந்தப் பிரச்னையாக இருந்தாலும் மனம் விட்டு பேசுவது நல்லது. மறதியால் பணம், நகைகளை இழக்க நேரிடும். 
 
பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களை திணிக்க வேண்டாம். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை உடனுக்குடன் செலுத்தப்பாருங்கள். வாகனம் அடிக்கடி பழுதாகும். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். குடிநீர், கழிவு நீர் குழாய் அடைப்பு வந்துப் போகும். 
 
அரசியல்வாதிகளே! எந்த கோஷ்டியிலும் சேராமல் நடுநிலையாக இருக்கப்பாருங்கள். 
 
கன்னிப் பெண்களே! பெற்றோருக்கு சில ஆலோசனைகள் வழங்குவீர்கள். வியாபாரத்தில் வழக்கமான லாபம் உண்டு. பெரிய முதலீடுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் சின்ன சின்ன பிரச்னைகள் வெடிக்கும். உயரதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். 
 
கலைத்துறையினர்களே! உங்களின் படைப்புகளை போராடி வெளியிட வேண்டி வரும். எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட வேண்டிய மாதமிது.  
 
அதிஷ்ட தேதிகள்: 1, 12, 21
அதிஷ்ட எண்கள்: 4, 7
அதிஷ்ட நிறங்கள்: இளம்சிவப்பு, வெள்ளை
அதிஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய்


இதில் மேலும் படிக்கவும் :