Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜனவரி மாத எண் ஜோதிடப் பலன்கள் - 2, 11, 20, 29

Numerology
Last Modified செவ்வாய், 2 ஜனவரி 2018 (12:34 IST)
2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதம் எதையும் சமாளிக்கும் தைரியம் பிறக்கும். 

 
மனோ பலம் அதிகரிக்கும். தோல்விமனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வி.ஐ.பிகள் உதவுவார்கள். மனைவியுடனான மோதல்கள், அவருக்கு இருந்த அசதி, சோர்வு யாவும் நீங்கும். வேற்றுமதத்தவரால் ஆதாயம் உண்டு. வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பூர்வீக சொத்தை மாற்றி புது வீடு வாங்க திட்டமிடுவீர்கள். 
 
பழைய உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் தங்கும். தந்தையின் ஆரோக்யம் கூடும். அரசால் ஆதாயம் உண்டு. மாதத்தின் மையப்பகுதியிலிருந்து கோபத்தில் வார்த்தைகளை விட வேண்டாம். கண், பல் வலி வந்துப் போகும். ஒரு சொத்தை காப்பாற்ற மற்றொரு சொத்தை விற்க வேண்டி வரும். சகோதர வகையில் சங்கடங்கள் வரும். 
 
அரசியல்வாதிகளே! எந்த கோஷ்டியிலும் சேராமல் நடுநிலையாக இருக்கப்பாருங்கள். 
 
கன்னிப் பெண்களே! பெற்றோர் உங்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு பாசமழைப் பொழிவார்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். பழைய சரக்குகளை தள்ளுபடி விலைக்கு விற்று தீர்ப்பீர்கள். வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் அதிகாரியால் சில நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். 
 
கலைத்துறையினர்களே! உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். பதறாமல் பக்குவமாக செயல்படவேண்டிய மாதமிது. 
 
அதிஷ்ட தேதிகள்: 6, 7, 11, 20, 16
அதிஷ்ட எண்கள்: 3, 5
அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
அதிஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய்


இதில் மேலும் படிக்கவும் :