Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மார்ச் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 8, 17, 26

Numerology
Last Modified வெள்ளி, 2 மார்ச் 2018 (20:12 IST)
8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் ஓரளவு நிம்மதி கிட்டும். பழுதான வண்டியை மாற்றுவீர்கள். 

 
கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்னை தீரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். புது வேலை கிடைக்கும். தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அரசாங்க வேலைகள் உடனே முடியும். வெளிநாட்டு பயணங்கள் உண்டு. 
 
சாதுர்யமாகப் பேசி பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். மாதத்தின் மையப்பகுதியிலிருந்து கனவுத் தொல்லையால் தூக்கம் குறையும். சட்டத்திற்கு புறம்பான வகையில் செயல்படுபவர்களுடன் நட்பு வேண்டாம். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். சகோதரங்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். 
 
அரசியல்வாதிகளே! தலைமைக்கு நெருக்கமாவீர்கள். 
 
கன்னிப் பெண்களே! பெற்றோருக்கு சில ஆலோசனை வழங்குவீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். வேலையாட்களால் ரகசியங்கள் கசியக் கூடும். புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் நேரங்காலம் பார்க்காமல் உழைத்தும் எந்த பயனும் இல்லையே, என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். 
 
கலைத்துறையினர்களே! புதுமையாக சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். புதியவரின் நட்பால் சாதிக்கும் மாதமிது.
 
அதிஷ்ட தேதிகள்: 8, 6, 14, 15, 17
அதிஷ்ட எண்கள்: 4, 7
அதிஷ்ட நிறங்கள்: பழுப்பு, ஆரஞ்சு
அதிஷ்ட கிழமைகள்: திங்கள், சனி


இதில் மேலும் படிக்கவும் :