Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மார்ச் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 5, 14, 23

Numerology
Last Modified வெள்ளி, 2 மார்ச் 2018 (20:01 IST)
5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், இந்த மாதத்தில் எதிலும் வெற்றி பெறுவீர்கள். 

 
உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். பணபலம் உயரும். அரசியலில் செல்வாக்குக் கூடும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். பிதுர்வழி சொத்து பிரச்னை முடிவுக்கு வரும். தந்தைவழியில் மதிப்பு, மரியாதைக் கூடும். மாதத்தின் மையப் பகுதியிலிருந்து உறவினர், நண்பர்களுடன் அளவாகப் பழகுங்கள். வாகனம் பழுதாகும். 
 
கழுத்து மற்றும் மூட்டு வலி வந்துப் போகும். மாதத்தின் பிற்பகுதியில் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். முன்பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த சொத்துக்கு மீதிப் பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். கல்யாணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். புது டிசைனில் நகை வாங்குவீர்கள். 
 
அரசியல்வாதிகளே! கட்சியின் மூத்த உறுப்பினர்களைச் சந்தித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். 
 
கன்னிப் பெண்களே! காதல் மற்றும் உயர்கல்வி சம்பந்தப்பட்ட குழப்பங்கள் நீங்கும். வியாபாரத்தில் கடையை உங்கள் ரசனைக்கேற்ப அழகுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் புது பொறுப்பை ஒப்படைபார்கள். 
 
கலைத்துறையினர்களே! உதாசினப் படுத்திய நிறுவனமே உங்களை அழைத்துப் பேசும். அதிரடி மாற்றங்கள் நிகழும் மாதமிது. 
 
அதிஷ்ட தேதிகள்: 5, 6, 17, 24, 23
அதிஷ்ட எண்கள்: 1, 3
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க் 
அதிஷ்ட கிழமைகள்: செவ்வாய், சனி


இதில் மேலும் படிக்கவும் :