Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மார்ச் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 7, 16, 25

Numerology
Last Modified வெள்ளி, 2 மார்ச் 2018 (20:07 IST)
7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், இந்த மாதத்தில் தொட்ட காரியம் துலங்கும். 

 
கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பு கிடைக்கும். புது வீடு கட்டி குடிப்புகுவீர்கள். குடும்பத்தில் நல்லது நடக்கும். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதைக் கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. மூத்த சகோதரர் சாதகமாக இருப்பார். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். உறவினர்கள், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் தங்கும். 
 
மனைவிவழியில் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். என்றாலும் மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, வயிற்று வலி வந்து நீங்கும். சிலர் வீடு மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். சொத்து வாங்குவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். 
 
அரசியல்வாதிகளே! தொகுதி நிலவரங்களை உடனுக்குடன் மேலிடத்துக்கு கொண்டு செல்லுங்கள். 
 
கன்னிப் பெண்களே! நீண்ட நாள் கனவு நனவாகும். மாதத்தின் பிற்பகுதியிலிருந்து எதிலும் நம்பிக்கையின்மை, வீண் கவலைகள், ஒருவித படபடப்பு வந்துச் செல்லும். வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் சொந்த விஷயங்களை உங்களிடம் சொல்லி ஆறுதல் அடைவார்கள். சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். 
 
கலைத்துறையினர்களே! எதிர்பார்த்த புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சமயோஜித புத்தியால் சாதிக்கும் மாதமிது.
 
அதிஷ்ட தேதிகள்: 7, 16, 20, 24
அதிஷ்ட எண்கள்: 2, 5
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், க்ரீம் வெள்ளை
அதிஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்


இதில் மேலும் படிக்கவும் :