Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மார்ச் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 6, 15, 24

Numerology
Last Modified வெள்ளி, 2 மார்ச் 2018 (20:05 IST)
6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், இந்த மாதத்தில் துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். 

 
உறவினர்களின் கனிவான விசாரிப்பால் ஆறுதல் அடைவீர்கள். வெளிநாட்டிலிருக்கும் நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். என்றாலும் கழுத்து வலி, வேலைச்சுமை வந்துப் போகும். சிறுசிறு விபத்துகள் வரக்கூடும். கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. மாதத்தின் மையப்பகுதியிலிருந்து பிரிந்தவர்கள் ஒன்று சேர்வீர்கள். 
 
மனைவியின் உடல் நலம் சீராகும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வேற்றுமதம், மொழி, இனந்தவரால் ஆதாயம் உண்டு. என்றாலும் தவிர்க்க முடியாத பயணங்கள் வந்துப் போகும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். 
 
அரசியல்வாதிகளே! எந்த கோஷ்டியிலும் சேராமல் நடுநிலையாக இருக்கப்பாருங்கள். 
 
கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். புது நட்பு மலரும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். பழைய வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளுங்கள். உத்யோகத்தில் ஒரே நேரத்தில் பல வேலைகளை பார்க்க வேண்டி வரும். சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். 
 
கலைத்துறையினர்களே! விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். புதிய பாதையில் செல்லும் மாதமிது.  
 
அதிஷ்ட தேதிகள்: 6, 5, 13, 14, 26
அதிஷ்ட எண்கள்: 3, 6
அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, சில்வர்கிரே
அதிஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி


இதில் மேலும் படிக்கவும் :