Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மார்ச் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 4, 13, 22, 31

Numerology
Last Modified வெள்ளி, 2 மார்ச் 2018 (19:59 IST)
4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாததத்தில் எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். 
 
வீடு வாங்க, கட்ட வங்கிக் கடன் உதவி கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். வர வேண்டிய தொகை கைக்கு வரும். பிள்ளைகள் ஆக்கப்பூர்வமாக செயல்படுவார்கள். பூர்வீக சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். இடம், பொருள், ஏவலறிந்து அதற்கேற்ப பேசி சாதிப்பீர்கள். சகோதரங்கள் உங்களின் உண்மையான அன்பை, பாசத்தைப் புரிந்துக் கொள்வார்கள். 
 
வழக்கில் திருப்பம் ஏற்படும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். மாதத்தின் பிற்பகுதியில் கணவன்-மனைவிக்குள் வாக்குவாதங்கள் வந்துப் போகும். யாருக்கும் ஜாமீன், சாட்சி கையெழுத்திட வேண்டாம். ஆனால் உங்களைச் சுற்றி இருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை உணர்வீர்கள். 
 
அரசியல்வாதிகளே! ஆதாரமில்லாமல் எதிர்கட்சிக்காரர்களை விமர்சிக்க வேண்டாம். 
 
கன்னிப் பெண்களே! பெற்றோரின் ஆலோசனையை ஏற்பது நல்லது. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். வேலையாட்கள் கொஞ்சம் முரண்டு பிடிக்கத்தான் செய்வார்கள். பங்குதாரரை அனுசரித்துப் போங்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் மேலதிகாரியின் அறிமுகம் கிடைக்கும். சக ஊழியர்களின் குறைகளில் கவனம் செலுத்த வேண்டாம். 
 
கலைத்துறையினர்களே! உங்களின் படைப்புத் திறன் வளரும். அனுபவ அறிவால் வெற்றி பெறும் மாதமிது.
 
அதிஷ்ட தேதிகள்: 4, 6, 8, 15, 22
அதிஷ்ட எண்கள்: 6, 8
அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், இளம்சிவப்பு 
அதிஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன்


இதில் மேலும் படிக்கவும் :