வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: சனி, 7 அக்டோபர் 2017 (05:04 IST)

விஜய்மல்லையாவிடம் சலுகை பெற்றாரா சோனியா காந்தி: ரிபப்ளிக் டிவியின் திடுக்கிடும் செய்தி

அர்னாப் அவர்களின் ரிபப்ளிக் டிவி அவ்வப்போது பல திடுக்கிடும் செய்திகளை வெளியிட்டு வரும் நிலையில் தற்போது வெளியிட்டுள்ள செய்தியால் நாடே பரபரப்பாகி உள்ளது.



 
 
மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சி இரண்டாவது முறை நீட்டித்தபோது சோனியா காந்தியும் அவருடைய குடும்பத்தினர்களும் பலமுறை இலவச மற்றும் சலுகை பயணமாக கிங்பிஷர் விமானத்தில் பயணம் செய்துள்ளதாக ஆதாரங்களுடன் கூடிய தகவலை ரிபப்ளிக் டிவி வெளியிட்டுள்ளது. அதேபோல் முன்னாள் ஜம்முகாஷ்மிர் முதல்வர் பரூக் அப்துல்லாவும் பலமுறை சலுகையை பெற்றுள்ளதாகவும், இந்த சலுகைக்காக அவர் அரசிடம் இருந்து பல ஆதாயங்களை பெற்றிருக்கலாம் என்றும் அந்த டிவி செய்தி வெளியிட்டுள்ளது.
 
ஆனால் காங்கிரஸ் கட்சி இந்த தகவலை மறுத்துள்ளது. இது ஆதாரமற்ற பொய்யான தகவல் என்றும், விமான டிக்கெட்டுக்கு கூட பணம் இல்லாமல் இருக்கும் குடும்பம் அல்ல சோனியா காந்தியின் குடும்பம் என்றும் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.