தம்பிதுரையின் பேச்சை மேசையை தட்டி வரவேற்ற சோனியா காந்தி!

தம்பிதுரையின் பேச்சை மேசையை தட்டி வரவேற்ற சோனியா காந்தி!


Caston| Last Modified வியாழன், 10 ஆகஸ்ட் 2017 (12:57 IST)
வெளையனே வெளியேறு இயக்கத்தின் 75-வது ஆண்டு நிகழ்வின் நிறைவையொட்டி பாராளுமன்றத்தில் நேற்று சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மக்களவை துணை சபாநாயகர் அதிமுகவின் தம்பிதுரை தமிழில் பேசியதால் மற்ற எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

 
 
இந்தியா சுதந்திரமடைவதற்கு முன்னர் ஆங்கிலேயருக்கு எதிராக இந்தியர்கள் நடத்திய முக்கியமான போராட்டங்களில் ஒன்று வெள்ளையனே வெளியேறு இயக்க போராட்டம். 1942-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த போராட்டத்தின் 75-வது ஆண்டு விழாவை பாராளுமன்றத்தில் நேற்று கொண்டாடினர்.
 
இந்த நிகழ்வில் பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் பேசினர். அதன் பின்னர் அதிமுக சார்பில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பேசினார். அப்போது அவர், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பல தரப்பினரும் கலந்துகொண்டு போராடினர். அதில் தமிழர்களின் பங்கு மிகவும் மகத்தானது என தமிழில் பேசினார் அவர்.
 
இந்நிலையில் அவர் தமிழில் பேசியதற்கு பாஜக எம்பிக்கள் மற்றும் பிற மாநில எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தான் இதற்கு ஆங்கிலத்தில் விளக்கம் அளிப்பேன் என கூறிய பின்னரும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து தனது உரையை ஆங்கிலத்திலேயே அவர் தொடர்ந்தார்.
 
பேசி முடித்த பின்னர் இறுதியில், நாடாளுமன்றத்தில் ஆங்கிலம், இந்தி தவிர எந்த மொழியில் பேசவும் அனுமதி வாங்க வேண்டியுள்ளது. தமிழ், வங்காளம், தெலுங்கு உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும் என்று தெரிவித்தார். இதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் மேசையை தட்டி வரவேற்பு தெரிவித்தனர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :