Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சோனியாவை சந்திக்கவுள்ள பாஜக பிரமுகர்கள்: தேர்தலில் ஆதரவு கோரும் ஆளும் கட்சி!!


Sugapriya Prakash| Last Modified வியாழன், 15 ஜூன் 2017 (12:59 IST)
குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரவு அளிப்பது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேச பாஜக முடிவு செய்துள்ளது.

 
 
குடியரசு தலைவர் பிரனாப் முகர்ஜியின் பதவி காலம் முடிவடைய உள்ள நிலையில் அடுத்த குடியரசு தலைவருக்கான வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்ய அரசியல் கட்சியில் மும்முரம் காட்டி வருகின்றனர்.
 
இந்நிலையில், சோனியாவை சந்தித்து பேச 3 பேர் அடங்கிய குழு ஒன்றை பாஜக ஏற்படுத்தியுள்ளது. இந்த குழுவில், ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி மற்றும் வெங்கையா நாயுடு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
 
இந்த சந்திப்பு நாளை நடைபெறயுள்ளது. இந்த சந்திப்பின் போது, குடியரசுத் தலைவர் வேட்பாளராக யாரை அறிவிக்கப் போகிறோம் என்றும், அவருக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தர வேண்டும் எனவும்  விரிவாகப் பேசுவார்கள் என தெரிகிறது.


இதில் மேலும் படிக்கவும் :