Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜனாதிபதி பதவிக்கு பொதுவேட்பாளர்: பாஜக இறங்கி வருவது ஏன்?


sivalingam| Last Modified சனி, 17 ஜூன் 2017 (05:04 IST)
இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலையுடன் முடிவடையவுள்ளதால் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய ஜூலை 17ஆம்தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்பிக்கள் ஓட்டு போடவுள்ளனர்.


 


இந்த நிலையில் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஜனாதிபதி வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தீவிரமாக உள்ளனர். பாஜகவுக்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்த காங்கிரஸ் கட்சி, பாஜக ஆதரவு கட்சிகளை தவிர அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்துள்ளது. இதனால் போட்டி கடுமையாக இருக்கும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் காங்கிரஸுடன் இணைந்து பொதுவேட்பாளரை நிறுத்தி ஜனாதிபதியை போட்டியின்றி தேர்வு செய்ய பாஜக முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதன்படி நேற்று மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரியை சந்தித்த பாஜக ஜனாதிபதியை தேர்வு செய்யும் குழு இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் சந்திக்க உள்ளனர்.

பாஜக தனியாகவே ஒரு வேட்பாளரை நிறுத்தினால் அவர் வெற்றி பெறும் சூழல் இருக்கும்போது பொதுவேட்பாளருக்கு இறங்கி வருவது ஏன் என்பது புரியாத புதிராக உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :