Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மணிசங்கர் அய்யர் காங்கிரசில் இருந்து தற்காலிக நீக்கம்

Last Modified வெள்ளி, 8 டிசம்பர் 2017 (08:48 IST)
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மணிசங்கர் அய்யர் காங்கிரஸ் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். பிரதமர் மோடியை அவர் தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சனம் செய்ததால் கட்சி மேலிடம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும், இதுகுறித்து கட்சி மேலிடம் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன

காங்கிரஸ் கட்சியின் தலைவராக விரைவில் பதவியேற்கவுள்ள ராகுல்காந்தி குறித்து பிரதமர் மோடி சமீபத்தில் விமர்சனம் செய்தபோது, ''முகலாய மன்னர் ஜஹாங்கிருக்குப் பிறகு ஷாஜகான் பதவியேற்றதைப் போன்று ஷாஜஹானுக்கு பின்னர் ஒளரங்கசீப் பதவியேற்றது போன்று காங்கிரஸ் கட்சியில் குடும்ப தலைமை தொடர்கிறது' என்று கூறினார். பிரதமரின் இந்த கருத்துக்கு பதிலளித்த மணிசங்கர் அய்யர், பிரதமர் மோடி மிக மோசமான அரசியல் செய்வதாக பொருள்படும் ஒரு சர்ச்சைக்குரிய வார்த்தையை பயன்படுத்தினார். இவரது இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் அய்யருக்கு தனது டுவிட்டரில் கண்டனம் தெரிவித்த ராகுல்காந்தி, மணிசங்கர அய்யர் இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார். ராகுல்காந்தியின் விருப்பப்படி மணிசங்கர் அய்யர் மன்னிப்பும் கேட்டுவிட்டார். இருப்பினும் அவர் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளது காங்கிரஸ் கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :