Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ராகுல் காந்தி இப்பொழுது ஏன் கோவிலுக்கு செல்கிறார்? உ.பி முதல்வர் கேள்வி

yogi
Last Modified வியாழன், 7 டிசம்பர் 2017 (12:50 IST)
இந்து சமய மக்களின் நம்பிக்கைகளோடு காங்கிரஸ் விளையாடுகிறது என்று உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆதித்யநாத் இந்துக்களின் மத நம்பிக்கையோடு காங்கிரஸ் விளையாடுவதாக விமர்சித்தார். காங்கிரஸ் மத்தியில் ஆட்சி செய்தபோது, ராமர் பாலத்தை இடிக்க முயற்சித்தது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுவது குறித்து காங்கிரஸ் கட்சி தனது நிலைபாட்டை விளக்க வேண்டும் என்றார்.
 
மக்கள் கோயில்களுக்குச் செல்வதே பெண்களை கிண்டலடிப்பதற்காகத் தான் என முன்பு சாடிய ராகுல் காந்தி இப்பொழுது ஏன் கோயில்களுக்குச் செல்கிறார் என கேள்வி எழுப்பினார். கோவிலுக்கு செல்வதில் எந்த தவறும் இல்லை நம்பிக்கையின் அடிப்படையில் கோவிலுக்கு செல்ல வேண்டும் பாசாங்குத்தனமாக செல்லக்கூடாது என்று தெரிவித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :