Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சரிந்தது மோடியின் செல்வாக்கு: குஜராத் தேர்தலில் பாஜக நிலை என்ன?

Last Updated: புதன், 6 டிசம்பர் 2017 (19:44 IST)
குஜராத்தில் வரும் 9 மற்றும் 14 ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டன.

இந்த கருத்து கணிப்பின்படி, குஜராத் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற பாஜகவுக்கும், காங்கிரஸுக்கும் சம் வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது. குஜராத்தில் பாஜக கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி நீடித்து வருகிறது.


இந்நிலையில் இந்த கருத்து கணிப்பின் முடிவுகள் பாஜகவுக்கு அதிர்ச்சி அளிக்கும் ஒன்றாக உள்ளது. பாஜக மற்றும் காங்கிரஸ் இரு கட்சிகளும் 43% வாக்குகளை பெற்று சமநிலையில் உள்ளது. இதன் மூலம், பாஜகவின் வாக்கு சதவிதம் 16% குறைந்துள்ளது.
ஆனால், காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி 14% உயர்ந்துள்ளது. பட்டேல் சமூகத்தினரும் காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் காங்கிரஸின் வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளதாக கருதப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :