Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி; டிசம்பர் 11-ஆம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

rahul
Last Modified புதன், 6 டிசம்பர் 2017 (10:55 IST)
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக உள்ள சோனியா காந்தி நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். நீண்ட காலமாக தலைமை பதவிக்கு தன்னை தயார்ப்படுத்தி வரும் ராகுல் காந்தி விரைவில் தலைவர் பொறுப்பை ஏற்பார் என பல நேரங்களில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூறி வருகின்றனர். கடந்த மாதம் 4-ந் தேதி ராகுல் காந்தி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இந்நிலையில் தலைவர் பதவிக்கு வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததாலும் ராகுல் காந்தியின் தலைவர் பதவிக்கு ஆதரவு தெரிவித்து 89 பேர் முன்மொழிந்து வேட்பு மனு தாக்கல் செய்ததாலும், ராகுல் காந்தி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகி விட்டது.
 
இருப்பினும் மனுக்களை வாபஸ் பெற 11-ந் தேதி கடைசி நாள் என்பதால் அன்றுதான் தலைவராக ராகுல் காந்தி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இதில் மேலும் படிக்கவும் :