நிற்காத ஒருவருக்கு குஷ்பு வாழ்த்து கூறினால் நமக்கு என்ன? திருநாவுக்கரசர்

Last Updated: வியாழன், 7 டிசம்பர் 2017 (17:34 IST)
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட போவதாக நடிகர் விஷால் அறிவித்தபோது அவருக்கு குஷ்பு வாழ்த்து தெரிவித்ததற்கு ஒருசில காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். குஷ்பு மீது காங்கிரஸ் மேலிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கராத்தே தியாகராஜன் வலியுறுத்தினார்
இந்த நிலையில் இதுகுறித்து கருத்து கூறிய தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், 'தேர்தலில் நிற்காத ஒருவருக்கு குஷ்பு வாழ்த்து தெரிவித்தாலோ, அல்லது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கு ஆறுதல் கூறினாலோ நமக்கு என்ன. குஷ்பு ஒரு நடிகை என்பதாலும், நடிகர் சங்கத்தில் உறுப்பினர் என்பதாலும் அவர் வாழ்த்து தெரிவித்திருக்கலாம். இதை பெரிதுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை
இருப்பினும் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் வேட்பாளர் ஒருவர் போட்டியிடும்போது ஒரு பொறுப்பில் இருப்பவர் கவனமாக கருத்து சொல்ல வேண்டும் என்று குஷ்புவுக்கு திருநாவுக்கரசர் அறிவுரை வழங்கியுள்ளார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :