புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Modified: வியாழன், 18 ஏப்ரல் 2019 (10:58 IST)

96 வயதில் சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்த அன்பழகன் !

திமுகவின் பொதுச்செயலாளர் க அன்பழகன் உடல்நலக்குறைவு காரணமாக சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்தார்.

திமுகவிற்கு இது முக்கியமான தேர்தல் கலைஞர் இல்லாமல் சந்திக்கும் முதல் தேர்தல். அதன் பொதுச்செயலாளரும் முத்த தலைவருமான க அன்பழகன் உடல்நலக் குறைவால் தேர்தல் பணிகளில் பங்கேற்க முடியாத சூழல் நிலவுகிறது.

உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக வீட்டிலேயே இருந்து ஓய்வு எடுத்துவரும் அன்பழகன் இன்று தேர்தலை முன்னிட்டு சக்கரநாற்காலியில் வாக்களிக்க வந்தார். தென் சென்னை தொகுதியில் வரும் கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் அவர் வாக்களித்தார்.

வாக்குச்சாவடியில் அவரைப் பார்த்ததும் திமுக தொண்டர்கள் உற்சாக மிகுதியில் ஆரவாரம் செய்தனர். அன்பழகன் தொண்டர்களைப் பார்த்து கையசைத்தார்.