செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. தேர்தல் 2019 சிறப்பு நிகழ்வுகள்
Written By
Last Modified: புதன், 17 ஏப்ரல் 2019 (18:37 IST)

எங்களுக்கு தேர்தலை நிறுத்த வேண்டுமென்ற எண்ணம் இல்லை: விஜயபாஸ்கர்

எங்களுக்கு தேர்தலை நிறுத்த வேண்டுமென்ற எண்ணம் இல்லை என்று கரூரில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்  செய்தியாளர்களிடம் கூறினார்.




கரூரில் கோவை ரோட்டில் உள்ள அ.தி.மு.க தேர்தல் மாவட்ட தலைமை பணிமனையில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது., கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியின் அ.தி.மு.க வேட்பாளர் அறிவிப்பு எப்போது என்று கேட்ட போது. எம்.பி தேர்தல் முடிந்தவுடன் அ.தி.மு.க கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்கள் அதை அறிவிப்பார்கள் என்றார். இந்நிலையில் 19 ம் தேதி முதல் பிரச்சாரம் தொடர்ந்து நடைபெறும் என்றும் கூறினார்.


மேலும், நேற்று நடந்த தி.மு.க வின் வன்முறை குறித்து கேட்டதற்கு, டெல்லியில் வந்த தேர்தல் மேற்பார்வையாளர் தான் இதற்கு மூலக்காரணம், ஏற்கனவே எங்களுக்கு அனுமதி கொடுத்த இடத்தினையும், அதே நேரத்தினையும் முறையான அனுமதி வாங்கிய நிலையில்., தி.மு.க வினர் திடீர் உள்ளிருப்பு போராட்டத்தினால், எங்களுடைய நேரத்தினை மாற்றி அமைத்துள்ளார். அந்த அறிவிப்பினை எங்களிடமும் கேட்டு செய்து இருக்கலாம், ஆனால் அவர் காங்கிரஸ் வேட்பாளருக்கும், அ.தி.மு.க வேட்பாளருக்கும் டைம் கொடுத்தது தான் மூலக்காரணம், மேலும், இரு கட்சியினரும் இரு திசையில் சென்று கொண்டிருக்கும் போது., கற்களை கொண்டு அ.தி.மு.க வினர் மீது தாக்குதல் நடத்தினர். எங்களுடைய வார்டு செயலாளர் ஒருவர் மண்டை உடைத்தும், ஒருவரது கால் உடைந்தும் பல்வேறு நபர்கள் ஆங்காங்கே சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆகையால் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு தோல்வி பயம் வந்து விட்டது. அ.தி.மு.க வினர் என்றுமே அராஜகத்திற்கு செல்ல மாட்டோம், அது தான் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எங்களுடைய கட்சி நிர்வாகிகளுக்கும், கட்சியினருக்கும் கற்றுக் கொடுத்த பாடம், எங்களுக்கு தேர்தல் நிறுத்தும் எண்ணம் இல்லை, எங்களுக்கு வெற்றி உறுதி, எந்த இடத்திற்கும் நாங்கள் பிரச்சினை செய்ய வில்லை என்று கூறினார்.

சி.ஆனந்தகுமார்