சென்னையில் வாக்களித்த தூத்துக்குடி வேட்பாளர் கனிமொழி !

Last Modified வியாழன், 18 ஏப்ரல் 2019 (09:10 IST)
தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி தனது வாக்கை சென்னையில் செலுத்தினார்.

திமுக சார்பில் தூத்துக்குடி தொகுதியில் அக்கட்சியின் மகளிரணி செயலாளர் கனிமொழி போட்டியிடுகிறார். இதற்காக இத்தனை நாட்கள் தூத்துக்குடியில் முகாமிட்டு பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில் அவருக்கான வாக்கு சென்னை மயிலாப்பூர் தொகுதியில் உள்ளதால் ஜனநாயக கடமையை செலுத்துவதற்காக சென்னை வந்த அவர் இன்று காலை புனித எப்பாஸ் பள்ளியில் தனது வாக்கை செலுத்தினார்.

அதன்பின் வாக்காளர்களிடம் பேசிய அவர் ’திமுக கூட்டணி வேட்பாளர்கள் மிக சிறப்பான வெற்றியை பெறுவார்கள்.’ எனக் கூறினார்.

தமிழகத்தின் இன்னபிற அரசியல் ஆளுமைகளும் தத்தமது தொகுதிகளில் வாக்களித்து வருகின்றனர். இதுவரையில் தமிழகத்தில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்துவருகிறது. சில தொகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் இயங்காததால் வாக்குப்பதிவு தொடங்க தாமதம் ஆனது.


 இதில் மேலும் படிக்கவும் :