அஜித் 58: அஜித்-சிவா-இளையராஜா கூட்டணியில் ஒரு குடும்ப படம்
இயக்குனர் ஷங்கரின் அடுத்த படத்தில் அஜித் நடிக்கவுள்ளதாகவும் கமல் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்ட நிலையில் தற்போது இருவருமே இல்லை என்பது முடிவாகிவிட்டது. காரணம் கமல் கட்சி ஆரம்பித்து முழுநேர அரசியலில் குதிக்கவுள்ளார், அஜித் ஏற்கனவே வாக்கு கொடுத்தபடி மீண்டும் இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
ஆனால் இந்த முறை பலர் கூறுவது போல் அஜித் நடிக்கவுள்ளது ஆக்சன் படமும் இல்லை, ஸ்பேஸ் படமும் இல்லை. முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் படமாம். அஜித்தின் வழக்கமான சண்டைக்காட்சிகள், வில்லனுடன் பேசும் பஞ்ச் டயலாக் இல்லாமல் முழுக்க முழுக்க ஒரு குடும்ப சப்ஜெக்ட்டில் இறங்க போகிறாராம்
தொடர்ச்சியாக ஆக்சன் படங்கள் கொடுத்துவிட்டதால் ஒரு மாற்றத்திற்காகவும் இனிமேலும் அதிக ரிஸ்க் எடுத்து சண்டைக்காட்சிகளில் நடிக்கக்கூடாது என்று மருத்துவர் எச்சரித்துள்ளதாலும் இந்த முடிவு என்று கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் படத்தின் விறுவிறுப்பு சுவாரஸ்யம் கொஞ்சமும் குறையாது என்கிறது சிவாவின் வட்டாரம். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்க வாய்ப்பு உள்ளதாம்