Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

விஜய்யால் மீண்டும் தடுமாறும் சிவகார்த்திகேயன்?


sivalingam| Last Modified திங்கள், 11 செப்டம்பர் 2017 (05:52 IST)
நடிகர் சிவகார்த்திகேயனின் 'வேலைக்காரன்' திரைப்படம் முதலில் ஆயுதபூஜை திருநாளில் வெளிவரவிருந்தது. ஆனால் திட்டமிட்டபடி படத்தை முடிக்க முடியாததால் தீபாவளிக்கு தள்ளிப் போடப்பட்டது. 


 
 
ஆனால் தீபாவளி தினத்தில் விஜய்யின் 'மெர்சல்' ரிலீஸ் ஆவதால் அவருடன் போட்டி போட முடியாத 'வேலைக்காரன்' பின்னர் டிசம்பர் 22ஆம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது.
 
இந்த நிலையில் 'மெர்சல்' படத்தின் பணிகள் தாமதம் ஆவதாகவும், தீபாவளிக்கு ரிலீஸ் என்பது சந்தேகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒருவேளை தீபாவளியை 'மெர்சல்' மிஸ் செய்தால், வேலைக்காரன் அந்த இடத்தை பிடிக்கும் என்றும், மெர்சல் 'பொங்கலுக்கு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் இந்த இரண்டு படங்களும் தீபாவளி, பொங்களுக்கு ரிலீஸ் என்றால் சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் டிசம்பர் 22ல் ரிலீஸ் ஆகும், என்றும் கூறப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :