Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வாழ்நாள் முழுவதும் இலவச வாய்ஸ் கால் சேவை: ஜியோவுடன் தீவிர மோதலில் ஏர்டெல்!!


Sugapriya Prakash| Last Updated: சனி, 9 செப்டம்பர் 2017 (11:43 IST)
ரிலையன்ஸ் ஜியோ வோல்ட்இ சேவைகளை வழங்கிவரும் நிலையில் ஏர்டெல்லும் வோல்ட்இ சேவைகளை வழங்கவுள்ளதாக தெரிவித்து அதற்கான சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது.

 
 
வோல்ட்இ சேவைகளை விரைவில் துவங்க இருப்பதால், ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு இலவச வாய்ஸ் கால் வழங்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
வாய்ஸ் கால்கள் அனைத்தும் வோல்ட்இ சேவைகளை கொண்டு மேற்கொள்ளப்பட இருக்கும் நிலையில் வாய்ஸ் கால் இலவசமாக வழங்க முடியும். 
 
ஏர்டெல் இதனை வெற்றிகரமாக செய்து முடிக்கும் பட்சத்தில் ஜியோவை அடுத்து வோல்ட்இ சேவை வழங்கும் இரண்டாவது நிறுவனமாக ஏர்டெல் இருக்கும்.
 
இதன் மூலம் ஏர்டெல் ஜியோவுடன் நேரடி போட்டியில் தீவிரமாக களமிறங்கிவுள்ள அறிகுறியாக உள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :