ஓர் ஆண்டை நிறைவு செய்த ஜியோ!!


Sugapriya Prakash| Last Modified புதன், 6 செப்டம்பர் 2017 (17:45 IST)
ரிலையன்ஸ் குழுமத்தின், ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனத்திறகு முகேஷ் அம்பானி தலைமை வகிக்கிறார். ஜியோ துவங்கி நேற்றுடன் 1 வருடம் முடிவடைந்துள்ளது. 

 
 
கடந்த 2016 ஜூலை 21 அன்று ஜியோ சேவை விரைவில் துவங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு பின்னர் ரிலையன்ஸ் ஜியோ சேவை 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 முதல் வணிக ரீதியாக செயல்பாட்டிற்கு வந்தது.
 
இந்திய டெலிகாம் நிறுவனங்களில் சேவையில் ஜியோ ஒரு பெறும் புரட்சியை ஏற்படுத்தியது. இலவசங்கள் மூலம் வாடிக்கையாளர்களை ஸ்தம்பிக்க செய்தது.
 
இந்தியாவின் மிகப் பெரிய மொபைல் நெட்வொர்க் சேவையினை வழங்கி வந்த பார்தி ஏர்டெல், ஐடியா செல்லுலார், வோடபோன் ஆகிய நிறுவனங்களை கதி கலங்க செய்தது. 
 
ஜியோ சேவை துவங்கிய 170 நட்களில் 100 மில்லியன் வாடிக்கையாளர் பெற்று உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் டெலிகாம் நிறுவனம் என்ற பெயரை ஜியோ எடுத்தது.
 
மேலும், கட்டண சலுகைகளை ஜியோ தற்போது வழங்கி வந்தாலும் அதன் வாடிக்கையாளர்கள் அதிக அளவில் இருந்து வருகின்றனர்.
 
ஜியோ தனது ஒரு ஆண்டு நிறைவை மகிழ்ச்சியாக கொண்டாடி வந்தாலும் மற்ற நிறுவனங்களுக்கு ஜியோ பெரிய இழப்பையே ஏற்படுத்தியுள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :