13 கோடி வாடிக்கையாளர்கள்; 365 நாட்களில்: ஜியோ அசத்தல்!!


Sugapriya Prakash| Last Modified வியாழன், 7 செப்டம்பர் 2017 (18:40 IST)
ஜியோ அறிமுகம் செய்யப்பட்டு ஒரு வருடம் ஆன முகேஷ் அம்பானி தனது ஊழியர்களை நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். 

 
 
அதில் ஜியோ கடந்த 365 நாட்களில் பல சாதனைகளை முறியடித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதுவரை ஜியோ சேவையில் 13 கோடி பேர் இணைந்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.
 
இந்தியா மட்டுமின்றி சர்வதேச சந்தையிலும் ரிலையன்ஸ் ஜியோ பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளது என கூறி தனது ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
 
இண்டர்நெட் பயன்பாடு மாதம் 20 கோடி ஜிபியில் இருந்து 150 கோடி ஜிபி வரை அதிகரித்துள்ளதாகவும், இதில் ஜியோ வாடிக்கையாளர்கள் மட்டும் 125 கோடி ஜிபி டேட்டாவினை பயன்படுத்துகின்றனர் என்றும் ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :