Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ரூ1-க்கு புதிய சேவை: பிஎஸ்என்எல் நிறுவனம் அதிரடி!!


Sugapriya Prakash| Last Modified வெள்ளி, 8 செப்டம்பர் 2017 (12:34 IST)
பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் இன்று முதல் ரூ.1-க்கு தனியார் இமெயில் சேவையை வழங்கும் திட்டத்தை துவங்கியுள்ளது.

 
 
ஜெய்பூரில் உள்ள டேட்டா இன்போசிஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த திட்டத்தை பிஎஸ்என்எல் வழங்கவுள்ளது. இந்த திட்டம் பிஎஸ்என்எல் கார்ப்பரேட் இமெயில் சர்வீஸ் திட்டமாகும்.
 
இந்த திட்டத்தில் தனியுரிமையையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் சேவைகளை வழங்குவதாகவும் பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது.
 
இந்த சேவையை பெற பின்வரும் இரண்டு வகையான வருடாந்திர கட்டணத்தின் கீழ் உங்களது இணைய இணைப்பை இணைக்கவேண்டும்.
 
1 ஜிபி அளவிலான ஸ்டோரேஜ் திட்டத்தை பெற ரூ.365 திட்டத்துடன் இணைய வேண்டும் மற்றும் 10 ஜிபி அளவிலான ஸ்டோரேஜ் திட்டத்தை பெற ரூ.999 திட்டத்துடன் இணைய வேண்டும்.


இதில் மேலும் படிக்கவும் :