Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜியோவை அதிரவிட 5ஜி சேவையில் களமிறங்கும் பிஎஸ்என்எல்!


Abimukatheesh| Last Updated: வியாழன், 7 செப்டம்பர் 2017 (12:21 IST)
பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் 5ஜி தொலைத்தொடர்பு சேவையை அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 
ஜியோ நிறுவனத்தின் இலவச சேவையை தொடர்ந்து அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் போட்டி போட்டு சலுகைகளை வாரி வழங்கி வருகின்றனர். பிஎஸ்என்எல் நிறுவனமும் தனது பங்குக்கு சேவைகளை குறைந்த கட்டணத்தில் வழங்கி வருகிறது.
 
இருந்தாலும் பிஎஸ்என்எல் நிறுவனம் 3ஜி சேவையைதான் வழங்கி வருகிறது. இந்நிலையில் தற்போது பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் 5ஜி சேவை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் 5ஜி சேவையை தொடங்க நோக்கியா நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது. 
 
2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிஎஸ்என்எல் தனது 5ஜி சேவையை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஜியோ சற்று அதிர்ச்சியில் உள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :