நான் கடவுள் பாலாவின் நான்காவது படம். யாரும் தொட்டிராத களம், கற்பனை செய்யாத கதாபாத்திரங்கள் பாலாவின் அடையாளம். இரண்டும் இதிலும் உண்டு. நித்தம் வந்து குவியும் பிணங்கள், சிதை நெருப்பில் தவம் இருக்கும் அஹோரி சாதுக்கள், பொங்கி பிரவாகித்துவரும் கங்கை என பலரும் கண்டிராத வடபுலத்து காசி மாநகரம். ஊனமுற்றவர்கள், ஊனமாக்கப்பட்டவர்கள், மூளை வளர்ச்சி, உடல் வளர்ச்சி குன்றிய குழந்தைகள், சிறுவர்கள், அனாதையாக்கப்பட்ட பெரியவர்கள் என பிச்சையெடுத்துப் பிழைக்க நிர்ப்பந்திக்கப்பட்ட தென்புலத்து விளிம்புநிலை மனிதர்கள். இந்த இரு உலகங்களை இணைக்கும் ருத்ரனின் நூலிழை கதை. |