கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு  சினிமா  விமர்சனம்
02 பிப்ரவரி 2009விமர்சனம்

நாலு பைட், ஆறு பாடல் படங்களிலிருந்து மாறுபட்டது அறிமுக இயக்குனர் சுசீந்திரனின் வெண்ணிலா கபடி குழு. கபடி விளையாட்டின் பின்னணியில் கிராமத்து இளைஞனின் வலி மிகுந்த வாழ்க்கையை‌ச் சொல்கிறது படம். ஆவணப்படம் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் படமாக்கியிருக்கும் விதம், கேமரா வெளிச்சம் படாத மனிதர்கள், யதார்த்தமான கிராமத்து சூழல் ஆகியவை சுசீந்திரனை நம்பிக்கை தரும் படைப்பாளிகள் பட்டியலில் சேர்கிறது. கமர்ஷியல் சினிமாவில் தென்படும் திருப்பங்கள், நாயகன் இருக்கும் அணி தொடர்ச்சியாக வெற்றி பெறுவது ஆகியவை படத்தின் தப்பாட்டங்கள்.