புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 10 ஜூலை 2024 (10:29 IST)

புதின் உங்க ஃப்ரெண்டுதானே.. போரை நிறுத்த சொல்லுங்க! - பிரதமர் மோடிக்கு அமெரிக்கா வேண்டுகோள்!

Modi Putin

இந்திய பிரதமர் மோடி ரஷ்யாவிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட நிலையில் பிரதமர் மோடிக்கு அமெரிக்கா புதிய வேண்டுகோளை விடுத்துள்ளது.

இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறையாக தேர்வு செய்யப்பட்ட பிரதமர் மோடி தற்போது ரஷ்யா, ஆஸ்திரியா உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று ரஷ்யா சென்றிருந்த அவரை அதிபர் விளாடிமிர் புதின் கட்டித்தழுவி வரவேற்றார். இதுகுறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சில விமர்சனங்களை வைத்திருந்தார்.

உக்ரைன் - ரஷ்யா இடையே போர் தொடர்ந்து வரும் நிலையில் பிரதமர் மோடி, புதினை ஆரத்தழுவியது நடுநிலை குறித்து சந்தேகத்தை ஏற்படுத்துவதாக கூறியிருந்தார். இந்நிலையில் ரஷ்யாவுடன் நட்புறவில் உள்ள பிரதமர் மோடி, போர் நிறுத்தம் குறித்து பேச வேண்டும் என அமெரிக்காவும் வலியுறுத்தியுள்ளது.
 

இதுகுறித்து பேசிய அமெரிக்க - இந்திய செய்தி தொடர்பாளர் மார்க்ரெட் மேக்லியோட் “இந்தியா உள்பட அனைத்து நட்பு நாடுகளும் உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போரை நிறுத்த சொல்லி ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. உக்ரைனில் இருந்து ரஷ்யா வெளியேற வேண்டும்.

பிரதமர் மோடி ஏற்கனவே சொன்னதை போல இது போருக்கான காலக்கட்டம் அல்ல. இந்தியா - ரஷ்யா இடையே விசேஷமான நட்புறவு உள்ளது. அதை பயன்படுத்தி ரஷ்யாவை போரை நிறுத்த சொல்லி இந்தியா வலியுறுத்த வேண்டும்” என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Edit by Prasanth.K