1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 8 ஜூலை 2024 (19:25 IST)

ரஷ்யா சென்றடைந்தார் பிரதமர் மோடி.. முப்படைகள் வரவேற்பு.. புதினுடன் முக்கிய பேச்சுவார்த்தை..!

பிரதமர் மோடி ரஷ்யாவுக்கு அரசு முறை சுற்றுப்பயணமாக சென்றுள்ள நிலையில் சற்றுமுன் அவர் ரஷ்யா சென்றடைந்ததாகவும் அவருக்கு ரஷ்யாவின் முப்படைகள் சிறந்த வரவேற்பு அளித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி தனது முதல் வெளிநாட்டு பயணமாக ரஷ்யாவுக்கு இன்று கிளம்பினார். சற்றுமுன் அவர் ரஷ்யாவை அடைந்துள்ள நிலையில் அவருக்கு முப்படைகள் சிறப்பான வரவேற்பு அளித்துள்ளனர்.

 அந்த வரவேற்பை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி அதன் பின் 5 நட்சத்திர ஹோட்டலில் தங்க இருப்பதாகவும் அங்கு அவர் ரஷ்யாவில் உள்ள இந்திய பிரபலங்களை சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது . அதன்பின் அவர் ரஷ்யாவில் நடைபெறும் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளார்.

2021 ஆம் ஆண்டு டெல்லியில் உச்சி மாநாடு நடந்த நிலையில் அதன் பிறகு தற்போது தான் மீண்டும் உச்சி மாநாடு ரஷ்யாவில் நடைபெறும் நிலையில் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார்.

இந்த மாநாட்டிற்கு பின் புதினுடன் அவர் முக்கிய பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் இரு நாட்டு நல்லுறவு குறித்த பேச்சுவார்த்தை மற்றும் சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Mahendran