ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 12 நவம்பர் 2024 (17:29 IST)

GATE 2025 தேர்வு எப்போது? முழு அட்டவணை இதோ..!

நாடு முழுவதும், ஐஐடியில் உள்பட மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு சேர நுழைவுத்தேர்வாக 'கேட்' தேர்வு எழுதுவது கட்டாயமாக உள்ளது. அதே போல், பல அரசு நிறுவனங்கள் 'கேட்' மதிப்பெண் அடிப்படையில் ஊழியர்களை பணியில் சேர்க்கும் தேர்வுகளை நடத்துகின்றன.  மொத்தம் 30 பாடப்பிரிவுகளில் இந்த தேர்வு கணினி முறையில் நடக்கின்றது.
 
'கேட்' தேர்வு 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும்.  3 மணி நேரம் நடக்கும் இந்த தேர்வு முடிவுகள் வெளியான நாளின் பிறகு, தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் 3 ஆண்டுகள் வரை செல்லுபடியாக இருக்கும்.
 
2025 ஆம் ஆண்டுக்கான 'கேட்' தேர்வு பிப்ரவரி 1, 2 மற்றும் பிப்ரவரி 15, 16 ஆகிய தேதிகளில், காலை மற்றும் பிற்பகல் என இரு வேளைகளிலும் நடத்தப்படும். காலை பருவம் 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறும், பிற்பகல் பருவம் 2.30 மணி முதல் 5.30 மணி வரை நடைபெறும்.
 
இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க  ஐஐடி ரூர்க்கி தேர்வு விண்ணப்ப காலத்தை நீட்டித்துள்ளது. ஆகவே, தேர்வர்கள் நவம்பர் 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்க முடியும்.
 
'கேட்' 2025 தேர்வு அட்டவணை:
 
பிப்ரவரி 01 (காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை): CS1, AG, MA
பிப்ரவரி 01 (பிற்பகல் 2.30 மணி முதல் 5.30 மணி வரை): CS2, NM, MT, TF, IN
பிப்ரவரி 02 (காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை): ME, PE, AR
பிப்ரவரி 02 (பிற்பகல் 2.30 மணி முதல் 5.30 மணி வரை): EE
பிப்ரவரி 15 (காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை): CY, AE, DA, ES, PI
பிப்ரவரி 15 (பிற்பகல் 2.30 மணி முதல் 5.30 மணி வரை): EC, GE, XH, BM, EY
பிப்ரவரி 16 (காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை): CE1, GG, CH, PH, BT
பிப்ரவரி 16 (பிற்பகல் 2.30 மணி முதல் 5.30 மணி வரை): CE2, ST, XE, XL, MN
 
 
 
Edited by Mahendran