7 மாத குழந்தை மேயரா? – இதெல்லாம் ஓவர்டா சாமி!
அமெரிக்காவில் பிறந்து ஏழு மாதங்களே ஆன குழந்தைக்கு மேயர் பதவி அளித்திருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ளது வொய்ட் ஹால் நகர். இந்த நகரத்தில் உள்ள தீயணைப்பு துறையில் பல தன்னார்வலர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்த தன்னார்வலர்களுக்கு சம்பளம் என்று தனியாக எதுவும் கிடையாது என்பதால் ஆண்டு தோறும் கௌரவ மேயர் பதவியை ஏலம் விட்டு அதன் மூலம் கிடைக்கும் நிதியை தன்னார்வலர்களின் நலனுக்காக பயன்படுத்துவார்கள்.
இந்நிலையில் இந்த ஆண்டிற்கான கௌரவ மேயர் பதவி ஏலம் விடப்பட்டது. அதில் சார்லி என்ற 7 மாத குழந்தையின் பெயரில் மேயர் பதவியை ஏலம் எடுத்துள்ளனர் அந்த குழந்தையின் குடும்பத்தினர். இதன்மூலம் அமெரிக்காவிலேயே மிகவும் வயது குறைந்த மேயர் என்ற சாதனையை குழந்தை சார்லி பெற்றுள்ளான்.
சார்லி பதவி பிரமாணம் செய்து கொண்டபோது குழந்தை இன்னும் பேச தொடங்கவில்லை என்பதால் வேறொருவர் குழந்தை சொல்ல வேண்டியதை ஒப்பித்து பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார்கள். இதுகுறித்து இணையத்தில் பதிவிட்டுள்ள பலர் ஒரு வயது கூட ஆகாத குழந்தையை மேயர் பதவியில் அமர வைப்பதெல்லாம் ரொம்ப ஓவர் என்ற ரீதியில் கருத்துக்களை தெரிவித்து வரும் அதேசமயம் பலர் சார்லிக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.