வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By SInoj
Last Updated : திங்கள், 27 ஏப்ரல் 2020 (16:27 IST)

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து தாயாரிக்க... பில் கேட்ஸ் நிதி உதவி !

உலகம் முழுவதும் கொரொனா வைரஸ் பரவி வருவதால், வல்லரசு நாடுகள் கூட இந்த நோயின் தீவிரத்தைச் சமாளிக்கப் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்க 29,73,264 பேராக அதிகரித்துள்ளது. இதுவரை 8,68, 806 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை கொரோனா தாக்குதலுக்கு 2,06,569 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர் மற்றும் மைக்ரோசாட் நிறுவனருமான பில்கேட்ஸின் நிதி உதவியுடன், கொரோனா வைரஸுக்குத் தடுப்பு மருத்து இன்னும் ஓராண்டு காலத்துக்குள் உருவாகிவிடும் என தகவல் வெளியாகிறது.

இந்தத் தகவலை தொழிலதிபர் பில்கேட்ஸ் உறுதிசெய்துள்ளதார். அதேசமயம, பில்கேட்ஸின் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை கொரோனா வைரஸுக்குத் தடுப்பு கண்டுபிடிக்க ரூ. 1900 கோடி ரூபாயைக் கொடுத்து உதவியுள்ளது குறிப்பிடத்தக்கது.