இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!
சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில், இன்று காலை திடீரென விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இன்று காலை நேரத்தில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.65 உயர்ந்தது. இதனடிப்படையில், ஒரு கிராம் ரூ.8,290-க்கும், ஒரு சவரன் ரூ.66,320-க்கும் விற்பனை செய்யப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில்இந்த விலை உயர்வு கூட போதாதென்று, பிற்பகலில் மீண்டும் ஒருமுறை தங்கத்தின் விலை மேலேறியுள்ளது. இன்று மாலை ஒரு கிராமுக்கு ரூ.120 உயர்ந்ததில், தற்போது ஒரு கிராம் ரூ.8,410-க்கும், ஒரு சவரன் ரூ.67,280-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதாவது, ஒரே நாளில் சவரன் தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.1,480 உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தங்க நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Edited by Mahendran