1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 27 ஏப்ரல் 2020 (09:24 IST)

கொரோனா வைரஸ் நெருக்கடியால் அதிகரித்துள்ள குழந்தைகள் ஆபாச படங்கள்

கொரோனா வைரஸ் காரணமாக இணையத்தில் வெளியாகும் குழந்தைகள் ஆபாச படங்களை அகற்றுவதில் "உலகளாவிய மந்தநிலை" உருவாகியுள்ளது என்று இப்படங்களை அகற்றுவது தொடர்பான செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

பல தொழில்நுட்ப நிறுவனங்களில் குறைந்த ஊழியர்களே பணிபுரிவதால் இணையத்தில் வெளியாகும் சட்டவிரோதமான குழந்தைகள் ஆபாச படங்களை நீக்குவத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தைகள் ஆபாச காணொளிகளை சிலர் சட்டவிரோதமாக காண்பதும் பகிர்வதும் அதிகரித்துவிட்டது என இணையதள வாட்ச் பவுண்டேஷன் அமைப்பு கூறுகிறது.

இந்த கொரோனா வைரஸ் நெருக்கடி நிலையிலும் 90% மேற்பட்ட குழந்தைகள் ஆபாச படங்கள் மற்றும் சந்தேகம் ஏற்படுத்தும் வலைத்தள பக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன என இந்த தொண்டு நிறுவனம் கூறுகிறது.
உலகளவில் ஐரோப்பாவில் இருந்து தான் அதிகமான குழந்தைகள் ஆபாச படங்கள் வெளியாகின்றன என்று இணையதள கண்காணிப்பு அமைப்பின் ஆண்டு அறிக்கை குறிப்பிடுகிறது.

மார்ச் 16 முதல் ஏப்ரல் 15 வரை 1,498 குழந்தைகள் ஆபாச படங்களுக்கான யூ.ஆர்.எல் நீக்கப்பட்டுள்ளது. ஆனால் மார்ச் 16-க்கு முன்பு நான்கு வாரங்களில் மட்டும் 14,947 படங்கள் நீக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.