1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 9 ஏப்ரல் 2025 (19:40 IST)

மெஸ்ஸியை பிச்சைக்காரனாக மாற்றிய ஏஐ வீடியோ.. ரசிகர்கள் கண்டனம்.!

AI உருவாக்கிய வீடியோ ஒன்று மெஸ்ஸியை பிச்சைக்காரனாக மாற்றியதை அடுத்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். 
 
எக்ஸ் தளத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு வீடியோவில், வீதியில் தனியாக வசிக்கும் கால்பந்து வீரார் மெஸ்சி ஒரு கிழிந்த குடிசையில் உணவு சாப்பிடுகிறார். இதைப் பார்த்த ரோனால்டோ, இரக்கம் கொண்டு அவரை தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். பின்னர், அவரை சுத்தம் செய்து குளிப்பாட்டி, ஸ்டைலிஷாக மாற்றி, ஒரு நல்ல வாழ்க்கைக்கான வாய்ப்பை வழங்குகிறார். வீடியோ முழுவதும் இருவருக்கும் இடையிலான அன்பும் இணைப்பும் அழகாக காட்டப்பட்டுள்ளது.
 
இது வெறும் AI-யால் உருவான கற்பனை வீடியோ என்றாலும், மெஸ்சி மற்றும் ரோனால்டோவின் ரசிகர்கள் அதிர்ச்சியும் ஆச்சரியமும் கொண்டு வீடியோவைப் பார்க்கிறார்கள். “இது ரொம்ப ஓவரா இருக்கு” என்று சிலர் கமெண்ட் செய்துள்ளனர்.
 
உண்மையில் மெஸ்சி இன்று உலகின் முன்னணி பணக்கார வீரர்களில் ஒருவர் என்பதும், அவருடைய சொத்து மதிப்பு $650 முதல் $800 மில்லியன் வரை இருக்கும் என கூறப்படுகிறது.
 
இது வெறும் நகைச்சுவை வீடியோதான் என்றாலும் இந்த வீடியோவுக்கு அவரது ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 
 
Edited by Siva