திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 8 ஜூன் 2022 (19:47 IST)

''விக்ரம்'' படம் திரையிட்ட தியேட்டரில் தீ விபத்து..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல் தயாரித்து நடித்த, விக்ரம் படத்தை லோகேஷ் இயக்கியிருந்தார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர் அனிருத். இவர், முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

சமீபத்தில் கமல், விஜய்சேதுபதி, பகத் பாசில், சூர்யா உள்ளிட்ட நடிகர்கள் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான படம் விக்ரம். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று, ரூ.200 கோடிக்கு மேல் வசூலை குவித்துள்ள நிலையில், புதுச்சேரி  யூனியலில் உள்ள காலாப்பட்டு பகுதியில்ஒரு தியேட்டர் இயங்கி வருகிறது. இதில், விக்ரம் படம் திரையிடப்பட்டது. அப்ப்போது, சூர்யாவரும் காட்சியில் திரையில் தீ பற்றியது. இதனால் படம் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் வேகமாக வெளியேறினர்.

தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வரும் முன்னர் திரை முற்றீல்யும் எரிந்துபோனது. இந்த தீ விபத்து, மின் கசிவால் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.