செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 2 டிசம்பர் 2024 (07:19 IST)

கம்ல்ஹாசனின் அடுத்த படத்தில் இணையும் ஜி வி பிரகாஷ்… அமரன் கொடுத்த வாய்ப்பு!

கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் 'தக் லைஃப்'  படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. இதில் கமல்ஹாசன், சிம்பு திரிஷா, ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக், , அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.  ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் மணிரத்னம் ஆகிய மூவரும் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. தற்போது கமல்ஹாசன் அமெரிக்காவில் ஏ ஐ தொழில்நுட்பம் படித்து வருகிறார்.

இதையடுத்து கமல்ஹாசன் அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்ததும் ஸ்டண்ட் இயக்குனர்கள் அன்பறிவ் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார். கமல்ஹாசன்237 என தற்காலிகமாக அழைக்கப்பட்டு வரும் இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷை இசையமைக்க வைக்க கமல்ஹாசன் விரும்புவதாக சொல்லப்படுகிறது. அதற்குக் காரணம் சமீபத்தில் அவர்கள் நிறுவனம் தயாரித்த அமரன் படத்துக்கு ஜி வி பிரகாஷின் பின்னணி இசை பிரமாதமாக இருந்ததால் கமல்ஹாசன் அவரையே தனது படத்துக்கும் இசையமைக்க வைக்கலாம் என ஆசைப்படுகிறாராம்.