செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 8 ஜூன் 2022 (18:57 IST)

அதிமுகவுக்கு ஒற்றை தலைமையா? ஈபிஎஸ் விளக்கம்

edappadi
அதிமுக விரைவில் ஒற்றை தலைமையின் கீழ் செயல்பட போகிறதா என்பதற்கு அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்
 
அதிமுக பொதுச்செயலாளர் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளதாகவும் இனிமேல் அக்கட்சி ஒற்றை தலைமையில் இயங்கும் என்றும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன
 
இது குறித்து விளக்கமளித்த எடப்பாடி பழனிச்சாமி, ‘அதிமுகவுக்கு பொதுச்செயலாளர் நியமிக்கப்படுவதாக கூறுவது கற்பனையானது என்றும் அதிமுகவுக்கு ஒற்றை தலைமை என யார் கிளப்பி விடுகிறார்கள் என்று தெரியவில்லை என்றும் கூறினார் 
 
கட்சியிலேயே இல்லாத சசிகலா குறித்ஹ்டு மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்புவது ஏன் என்றும் ஆளும் கட்சியைத் தவிர்த்து எல்லாமே எதிர்க்கட்சி தான் என்றாலும் அதில் பிரதான எதிர்க்கட்சி அதிமுக என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்