செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 2 டிசம்பர் 2024 (07:24 IST)

விடுதலை மூன்றாம் பாகமும் இருக்கா?... ரசிகர்களுக்கு வெற்றிமாறன் கொடுக்கப் போகும் சர்ப்ரைஸ்!

கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் நேர்மறையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது. இதையடுத்து வெற்றிமாறனின் ஹிட் பட லிஸ்ட்டில் விடுதலையும் இணைந்தது. இதையடுத்து விடுதலை 2 டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதன் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. அதில் கலந்துகொண்ட படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா படம் குறித்து பாராட்டிப் பேசியுள்ளார். இந்நிலையில் தற்போது விறுவிறுப்பாக பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வரும் நிலையில் படம் குறித்த ஒரு சுவாரஸ்யமானத் தகவல் வெளியாகியுள்ளது.

அதில் “படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் மூன்றாம் பாகத்துக்கான ஒரு முன்னோட்டம் விடப்பட்டு, கதை ஒரு முடிவற்ற தன்மையோடு முடியுமாம். அதனால் மூன்றாம் பாகத்தை சில ஆண்டுகள் கழித்து வெற்றிமாறன் இயக்கக் கூடும் என சொல்லப்படுகிறது” என சொல்லப்படுகிறது.