1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 16 ஜனவரி 2018 (18:04 IST)

நாடோடிகள் 2; இந்த முறை ஃபேஸ்புக் காதல்

ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை நாடோடிகள் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 
சமுத்திரகனி இயக்கத்தில் நட்பை மையப்படுத்தி வெளியான திரைப்படம் நாடோடிகள். இந்த திரைப்படம் மூலம் சமுத்திரகனி தமிழ் சினிமாவில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். காதல் ஜோடியை சேர்த்து வைக்கும் நண்பர்கள் சந்திக்கும் விளைவுகளை தெளிவான திரைக்கதையுடன் உருவானது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 
 
இந்நிலையில் தற்பொது நாடோடிகள் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை ஃபேஸ்புக் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. படத்தின் நடிக்க உள்ளவர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.