Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

விஐபி 2' படத்தை இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் செய்த தனுஷ்


sivalingam| Last Modified வியாழன், 15 ஜூன் 2017 (22:41 IST)
தனுஷ், அமலாபால், நடிப்பில் ரஜினியின் இளையமகள் செளந்தர்யா நடித்த 'விஐபி 2' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை மும்பையில் நடத்த தனுஷ் திட்டமிட்டுள்ளார்.


 


ஏற்கனவே தனுஷ் நடித்த இரண்டு இந்தி படங்கள் வெற்றி பெற்றுள்ளதால் 'விஐபி 2' படத்தை இந்தியிலும் ரிலீஸ் செய்ய முடிவு தனுஷ் முடிவு செய்துள்ளாராம். மேலும் கஜோல் இந்தியின் முன்னணி நடிகை என்பதால் இந்த படம் அங்கும் நல்ல வசூலை பெற்றுத்தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் மற்றும் அமிதாப்பச்சன் ஆகிய இருவரும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரே மேடையில் இரண்டு சூப்பர் ஸ்டார்கள் தோன்றினால் இந்த படத்தை இந்தியாவே திரும்பி பார்க்கும் என்பது தனுஷின் திட்டம் என்று கூறப்படுகிறது.

கலைப்புலி எஸ்.தாணு மற்றும் தனுஷ் இணைந்து தயாரித்து வரும் இந்த படத்தில் தனுஷ், அமலாபால், கஜோல், சமுத்திரக்கனி, சரண்யா, விவேக், மோனல் கஜ்ஜார், ரிஷிகேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார்.  சமீர் தாஹிர் ஒளிப்பதிவாளராகவும், சத்யராஜ் நடராஜன் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிந்துள்ள இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :