திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Suga)
Last Updated : சனி, 11 நவம்பர் 2017 (19:47 IST)

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் 3 ஹீரோயின்கள்

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில், 3 ஹீரோயின்கள் நடிக்கின்றனர்.


 
 
அடல்ட் காமெடியான ‘ஹர ஹர மஹாதேவஹி’ படத்தை இயக்கியவர் சந்தோஷ் பி ஜெயகுமார். கெளதம் கார்த்தி ஹீரோவாகவும், நிக்கி கல்ரானி ஹீரோயினாகவும் நடித்திருந்தனர். இந்தப் படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மறுபடியும் அடல்ட் காமெடிப் படத்தை இயக்குகிறார் சந்தோஷ் பி ஜெயகுமார்.
 
‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ எனப் பெயர் வைக்கப்பட்ட இந்தப் படத்தில், கெளதம் கார்த்தி ஹீரோவாக நடிக்கிறார். வைபவி ஷாண்டில்யா, யாஷிகா ஆனந்த், சந்த்ரிகா ரவி என மூன்று ஹீரோயின்கள் நடிக்கின்றனர். சென்னையில் நடந்துவரும் படப்பிடிப்பு, விரைவில் தாய்லாந்தில் நடைபெற இருக்கிறது.