மணிரத்னம் படத்தில் சிம்பு; மகிழ்ச்சியில் ரசிகர்கள்

Sasikala| Last Modified சனி, 11 நவம்பர் 2017 (11:02 IST)
நடிகர் சிம்புவுக்கு படங்கள் சில வருடமாகவே மிகவும் மோசமான நிலையிலேயேதான் உள்ளது. அவருடைய ரசிகர்களை திருப்திப்படுத்தி சிம்பு ரசிகர்கள் எல்லோரும் கொண்டாடும்படி ஒரு படம் அமைந்தது என்றால் அச்சம் என்பது மடமையடா  தான்.

 
இப்படம் வெளிவந்து இன்றுடன் ஒரு வருடம் ஆகின்றது, அதை ரசிகர்கள் டுவிட்டரில் கொண்டாடி வருகின்றனர். AAA-வில்  மீண்டு வருவார் என்று நினைத்தால் சொதப்பினார். இதனால், ரசிகர்கள் மிகவும் கவலையில் இருக்க, அவர்களுக்கு ஆறுதலாக  தற்போது சிம்பு மணிரத்னம் படத்தில் கமிட் ஆகியிருப்பதாக ஒரு செய்தி வந்ததுள்ளது.
 
இந்த நிலையில் மணிரத்னம், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜோதிகா, அரவிந்த் சாமி ஆகியோரை  வைத்து ஒரு புதிய படம் இயக்க இருப்பதாகவும், சிம்பு முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சிம்பு, மணிரத்னம் இணைய வேண்டும் என்பது ரசிகர்களின் நீண்ட நாள் ஆசை. அது தற்போது நிறைவேறியுள்ளது சிம்பு  ரசிகர்களுக்குப் மகிழ்ச்சியை தந்துள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :