வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : சனி, 11 நவம்பர் 2017 (13:26 IST)

நயன்தாராவின் அறம் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

நயன்தாரா நடிப்பில் கோபி இயக்கத்தில் நேற்று உலகம் முழுவதும் வெளிவந்த படம் அறம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. படத்திற்கு அனைத்து இடங்களில் இருந்தும் நல்ல விமர்சனங்கள் குவிந்து வருகின்றது.

 
அறம் படத்தில் மாவட்ட ஆட்சியராக நடித்துள்ள நயன்தாரா, தண்ணீர் பஞ்சத்தில் சிக்கி தவிக்கும் கிரமத்தில் எவ்வாறு  நடவடிக்கைகள் எடுக்கிறார் என்பதே படத்தின் கதை. 
 
இந்நிலையில் அறம் நேற்று முதல் இரண்டு காட்சிகளுக்கு கூட்டம் குறைவாக இருந்தாலும், பாசிட்டிவ் விமர்சனத்தால் மாலை, இரவு காட்சிகள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. தற்போது பாக்ஸ் ஆபீசின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. தமிழகம் முழுவதும் ரூ. 1 கோடி வரை வசூல் செய்திருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
 
தற்போது ரசிகர்களை தாண்டி பிரபலங்களும் நயன்தாராவின் இந்த துணிச்சலான நடிப்பை பாராட்டி வருகின்றனர்.