விக்ரம் மகனுடன் ஜோடி சேர போவது கமலின் ரியல் மகளா? சூர்யாவின் ரீல் மகளா?
டோலிவுட்டில் சமீபத்தில் வெளியான ஆர்ஜுன் ரெட்டி படம் அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனை திடர்ந்து அர்ஜூன் ரெட்டி படத்தை தமிழில் ரிமேக் செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்த படத்தில் விகரமின் மகன் துருவ் நாயகனாக அறிமுகமாக இருக்கிறார் என செய்திகள் வெளியானது.
இந்நிலையில் இப்படத்தில் நாயகியாக கமல்ஹாசன் மகள் அக்ஷாரா ஹாசன் நடிக்க வாய்ப்பு இருப்பதாக பேசப்படுகிறது.
அதே வேலையில், சூர்யா- ஜோதிகா நடித்த சில்லுனு ஒரு காதல் படத்தில், அவர்களுக்கு மகளாக நடித்த ஷ்ரியா ஷர்மாவிடமும் நாயகியாக நடிக்க பேச்சு வார்த்தை ந்டைபெற்று வருகிறதாம்.
விரைவில், விக்ரம் மகனுடம் ஜோடி சேர போவது கமலின் ரியல் மகளா? சூர்யாவின் ரீல் மகளா? என்பதை படக்குழு அறிவிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.