வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sasikala
Last Updated : திங்கள், 9 அக்டோபர் 2017 (12:00 IST)

பிராமணர் அல்லாதவர்கள் 36 பேர் அர்ச்சகர்களாக நியமனம்: நன்றி தெரிவித்து கமல் ட்வீட்

திருவாங்கூர் தேவஸ்தானத்தில் பிராமணர் அல்லாதவர்களை அர்ச்சகர்களாக நியமித்த கேரள முதல்வர் பிரனாய் விஜயனுக்கு நடிகர் கமல்ஹாசன் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 
இந்நிலையில் கேரளாவில் திருவாங்கூர் தேவஸ்தானத்தில் 6 தலித்துகள் உட்பட 36 பிராமணர் அல்லாதவர்களை அர்ச்சகர்களாக  நியமித்தள்ளது. திருவிதாங்கூர் தேவஸ்தானம் கேரளா மாநில அறநிலையத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள 1248 கோவில்கள்  உள்ளன. இந்த கோவில்களில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
 
அர்ச்சகர்கள் தேர்வு இட ஒதுகீட்டு முறையிலும், தகுதி மற்றும் தேர்வு அடிப்படையிலும் நடைபெற்றதாகவும் கேரள அறநிலையத்துறை அமைச்சர் கடகம்வள்ளி சுரேந்திரன் தெரிவித்திருந்தார். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர்கள் முழு நேர  மற்றும் பகுதி நேர அர்ச்சகர்களாக செயல்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்லது. கேரள அரசின் இந்த நடவடிக்கையை  பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.

 
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் கேரள முதல்வரின் நடவடிக்கையை பாராட்டி டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் பெரியாரின் கனவு நிறைவேறியுள்ளதை தெரிவிக்கும் வகையில் பெரியாருக்கு வணக்கத்தையும் தெரிவித்துள்ளார்.