1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Updated : ஞாயிறு, 8 அக்டோபர் 2017 (23:01 IST)

கமல் என்னதான் நல்லா நடிச்சாலும் ரஜினி தான் சூப்பர் ஸ்டார்: சாருஹாசன்

ஒருபக்கம் உலக நாயகன் கமல்ஹாசன் தனிக்கட்சி ஆரம்பித்து முதல்வர் ஆகும் ஆசையில் காய்களை நகர்த்தி வரும் நிலையில் இன்னொரு பக்கம் கமல்ஹாசனின் சொந்த சகோதரர் சாருஹாசனே, கமல் முதல்வராக வாய்ப்பு இல்லை என்று கூறி வருகிறார்



 
 
இந்த நிலையில் கமல் என்னதான் நல்ல நடிகராக இருந்தாலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் என்றும் அவரிடம் இனம் தெரியாத ஒரு கவர்ச்சி இருப்பதாகவும் இன்றைய பேட்டியில் சாருஹாசன் கூறியுள்ளார். சிவாஜி மிகப்பெரிய நடிகர் தான் இருந்தாலும் தலைவர் என்றால் அவர் எம்ஜிஆர் தான், அதேபோல் கமல் நல்ல நடிகர் என்றாலும் ரஜினிக்குத்தான் மக்கள் கவர்ச்சி உள்ளது என்று தனது பேட்டியில் மேலும் சாருஹாசன் கூறியுள்ளார்.
 
இந்த நிலையில் இதுவரை அரசியல் களம் என்பது அதிமுக-திமுக என்ற நிலை மாறி இனிமேல் ரஜினி கட்சி மற்றும் கமல் கட்சி என்ற நிலை ஏற்படலாம் என்று பிரபல அரசியல் விமர்சகர் ஒருவர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்