’’காதல் சின்னத்தின்’’ முன்பு’ வலிமை’ அஜித்.... வைரலாகும் புகைப்படம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்தின் புதிய புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித். இவரது நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் வலிமை. மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் முடிவடைந்த நிலையில், போஸ்ட் புரொடெக்சன் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நடிகர் அஜித்குமார் டெல்லியில் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் முன்பு புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதுகுறித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
மேலும், இப்படத்தில் அஜித் உடன் ஹூமா குரேஷி, கார்த்திகேயா, சுமித்ரா, யோகிபாபு, புகழ், உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவில் விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை போனிகபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர்.